| ADDED : ஜூலை 12, 2011 12:19 AM
கரூர்: 'மாநில அளவிலான பெரியவர் மற்றும் சிறியவர்களுக்கான செஸ் போட்டி
கரூரில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் நடக்கிறது' என, ஆனந்த் செஸ் அகடாமி
செயலாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது: கரூர் ஆனந்த் செஸ் அகடாமி மற்றும் கரூர் மாவட்ட சதுரங்க
கழகம் இணைந்து நடத்தும், மாநில அளவிலான பெரியவர் மற்றும் சிறியவர்களுக்கான
செஸ் போட்டி வரும் 16 மற்றும் 17ம் தேதி என இருநாட்கள், கரூர்- கோவை
ரோட்டில் உள்ள வி.என்.சி., மஹாலில் நடக்கிறது. தமிழக போக்குவரத்து துறை
அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியை துவக்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி
பெறுபவர்களுக்கு பெரியவர் பிரிவில் முதல் பரிசு 5,000 ரூபாய், இரண்டாம்
பரிசு 3,000, மூன்றாம் பரிசு 2,000, நான்காம் பரிசு 1,000 ரூபாய் என 20
பேருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. சிறுவர்களுக்கான பிரிவில் 9,11,13,17
ஆகிய வயதுக்கு உட்பட்டோருக்கு ஒவ்வொரு பிரிவிலும் 20 பரிசுகள் மொத்தம் 80
பேருக்கு பரிசு வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக
சிறியவர்களுக்கு 100 ரூபாய், பெரியவர்களுக்கு 150 ரூபாய் செலுத்த வேண்டும்.