உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகளிர் சுய உதவி குழுக்களுக்கு42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்கரூர்:-''மகளிர் சுய உதவி குழு, வாங்குவோர் இடையே, 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் தான்தோன்றிமலையில், மகளிர் சுய உதவி குழுவின் பொருட்கள் விற்பனையாளர் மற்றும் வாங்குவோர் இடையேயான, வணிக சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:கரூர் மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் வசிக்கும் மகளிரை, தொழில் முனைவோராக தரம் உயர்த்திட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு தொழில் சார்ந்த பயிற்சி, தொழில் வாய்ப்புகள் குறித்த ஆலோசனை, மகளில் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான விபரங்களை, சேவை மையங்கள் மூலமாக தெரிவிக்கப்பட உள்ளது.இதற்காக, மதி சிறகுகள்- மகளிர் புத்துயிர் என்ற அமைப்பு பெயரில் புதிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கடன் கொடுத்து தொழில் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய முன் வந்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம், மகளிர் சுய உதவி குழுவினர் வாங்கிய கடனை, சரியாக உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்துகின்றனர்.இந்நிகழ்ச்சியின் வாயிலாக, 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக, 10 வணிக நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினரிடையே, 86.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !