மேலும் செய்திகள்
28ல் மனுநீதி நாள் முகாம்
26-Aug-2024
மாநகராட்சி ஊழியர்களுக்கு தடகளப்போட்டிகள்
16-Aug-2024
கரூர் : 'வரும், 28ல் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, பல்-வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:ஹாக்கி ஜாம்பவான், மேஜர் தயான் சந்தின் பிறந்த நாளான, ஆக., 29-ல், தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. அன்று காலை, 8:00 மணிக்கு, கரூர் மாவட்ட மைதானத்தில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அதில், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவில், கையுந்துபந்து, 100 மீட்டர் ஓட்டம், 25 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவில், கூடைப்பந்து, கால்பந்து, 100 மீட்டர் ஓட்டம், 45 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவில், 50 மீட்டர் ஓட்டம் நடக்கிறது. போட்டி நடக்கும் காலை, 8:00 மணிக்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Aug-2024
16-Aug-2024