உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொய்யாமணி வாரச்சந்தைக்கு அடிப்படை வசதி தேவை

பொய்யாமணி வாரச்சந்தைக்கு அடிப்படை வசதி தேவை

குளித்தலை: குளித்தலை அடுத்த பொய்யாமணி பஞ்., திருச்சாப்பூர் - இனுங்கூர், ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலை பிரிவு சாலையில், கடந்த, 2019ல் இருந்து மதியம் முதல் இரவு வரை காய்கறி சந்தை நடந்து வருகிறது. இந்த வாரச்சந்தையால், நங்கவரம், இனுங்கூர், நல்லுார், குமாரமங்கலம், பணிக்கம்பட்டி, குப்புரெட்டியப்பட்டி உள்ளிட்ட, 50க்கு மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பயிரிடப்பட்ட கீரை, காய்கறிகள், தாணியங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த வாரச்சந்தைக்கு, மாவட்ட நிர்வாகம் முறையாக அனுமதி வழங்கி, அடிப்படை வசதிகள் மேம்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை