உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இந்திய கம்யூ., கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூ., கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூ., கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம்கரூர்:கரூர் மாவட்ட இந்திய கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் மோகன்குமார், சண்முகம், நிர்வாக குழு உறுப்பினர் ரத்தினம், க.பரமத்தி ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை