திறன்மிகு உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரவக்குறிச்சி, கரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், திறன்மிகு உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாநில தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கரூர் கோட்டத்தில், அரசாணை விதிமுறைப்படி திறன்மிகு உதவியாளர்கள் இரண்டாம் நிலை, 75 சதவீத காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலதாமதம் செய்வதை கண்டித்தும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.