உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை மண்டியில், வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கள்ளப்பள்ளி, கருப்பத்துார், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு, லாலாப்பேட்டை ஏலம் கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நேற்று பூவன் வாழைத்தார், 300 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 200 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை