மேலும் செய்திகள்
சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
02-May-2026
கரூர்:புன்னம்சத்திரம் கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், வைகாசி மாத பவுர்ணமியையொட்டி, சிறப்பு அலங்காரம் நடந்தது.மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், தலையூர் மாரியம்மன் கோவில், புகழூர் மாரியம்மன் கோவில், பொன்னாச்சி அம்மன் கோவில், திருகாடுதுறை மாரியம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில்களிலும், வைகாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
02-May-2026