உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

கரூர்:கரூர் மாநகராட்சி, புதிய கமிஷனராக பிரித்திவிராஜ் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.த.வெ.க., ஆட்சி அமைந்த நிலையில், மாநிலம் முழுவதும் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, கரூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த சுதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, சென்னை மாநகராட்சி வருவாய், நிதிப்பிரிவு துணை ஆணையாளராக இருந்த பிரித்திவிராஜ், கரூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று, கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு, மாநகராட்சி, 2வது மண்டல குழு தலைவர் அன்பரசன், காங்., கட்சி கவுன்சிலர் ஸ்டீபன் ராஜ் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை