மேலும் செய்திகள்
நாமக்கல் உழவர் சந்தையில் 22 டன் காய்கறி விற்பனை
12-Aug-2024
நாமக்கல்: நாமக்கல் கோட்டை மெயின் சாலையில், உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினமும், காலை, 5:00 முதல், 10:00 மணி வரை செயல்படும் இங்கு, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டு-வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.ஞாயிற்றுக்கிழமையான நேற்று, 167 விவசாயிகள், 24,645 கிலோ காய்கறிகள், 4,440 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள், இதர காய்கறிகள், 350 கிலோ என, மொத்தம், 29,455 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்தனர்.அவற்றை, 5,891 நுகர்வோர் வங்கி சென்றனர். அதன் மூலம் மொத்தம், 10 லட்சத்து, 38,865 ரூபாய்க்கு விற்பனையானது. தக்-காளி ஒரு கிலோ, 20 ரூபாய், கத்தரி, 48 ரூபாய், வெண்டை, 20 ரூபாய், சின்ன வெங்காயம், 40 ரூபாய், பெரிய வெங்காயம், 55 ரூபாய், இஞ்சி, 10 ரூபாய்க்கு விற்பனையானது.
12-Aug-2024