உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரத்தில் பூக்கள் விலை உயர்வு

கிருஷ்ணராயபுரத்தில் பூக்கள் விலை உயர்வு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், செக்கணம், எழுதியாம்பட்டி, தாளியாம்பட்டி ஆகிய இடங்களில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். பூக்கள் பறிக்கப்பட்டு கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி ஆகிய இடங்களில் விற்கப்படுகிறது. கடந்த வாரத்தில் பூக்கள் குறைந்த விலையில் விற்பனை நடந்தது.தற்போது முகூர்த்த சீசன் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய நிகழ்ச்சிகள் காரணமாக பூக்கள் விலை உயர்ந்து விற்பனை நடந்தது. நேற்று விரிச்சிப்பூக்கள் கிலோ, 90 ரூபாயில் இருந்து, 150 ரூபாய், சின்னரோஜா கிலோ, 100 ரூபாயில் இருந்து, 200 ரூபாய், செண்டுமல்லி பூக்கள் கிலோ, 20 ரூபாயில் இருந்து, 60 ரூபாய்க்கு விற்கபட்டது. பூக்கள் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !