உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் கொளுத்தும் வெயில் இளநீர் விலை திடீர் உயர்வு

கரூரில் கொளுத்தும் வெயில் இளநீர் விலை திடீர் உயர்வு

கரூர்: கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பகுதிகள் மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதிகளின், கரையோர பகுதிகளில் மட்டும் தென்னை விவசாயம் நடக்கிறது. இளநீர் சாகுபடி குறைந்தது. கரூர் மாவட்ட இளநீர் தேவைக்கு, திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலை பேட்டை மற்றும் ஈரோடு, கோவை மாவட்டங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.இந்நிலையில், கரூரில் கடந்த சில நாட்களாக கோடைக் காலத்தை போல வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், இளநீர் வரத்து குறைவால் கடந்த மாதம், 30 ரூபாய் வரை விற்ற இளநீர், தற்போது, 40 ரூபாயில் இருந்து, 50 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து, இளநீர் வியாபாரிகள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கோடையை போல, வெயிலின் தாக்கம் உள்ளது. இதனால், பொதுமக்கள் இளநீரை விரும்பி அருந்துகின்றனர். மேலும், கரூர் மாவட்டத்தில், 70 சதவீதம் இளநீர் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், வெளி மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று இளநீரை கொள்முதல் செய்து கொண்டு வருகிறோம். வரத்து குறைவு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட காரணங்களால், இளநீர் விலையை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ