மேலும் செய்திகள்
டூவீலர்கள் மோதல்: இருவர் படுகாயம்
23-Aug-2024
அரவக்குறிச்சி: தென்னிலை அருகே, கூனம்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 50. இவர் சின்னதாராபுரத்தில் இருந்து, தென்-னிலை செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, சி.கூடலுார் கீழ் பாகம் வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மனைவி மீனாம்பாள், 51, என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், கிருஷ்ணசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணசாமியை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்-துவமனையில் அனுமதித்தனர்.தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
23-Aug-2024