மேலும் செய்திகள்
ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை
05-Jun-2025
சாக்கடை கால்வாய் பணிக்கு பூமி பூஜை
10-May-2025
Playoffல் காலுன்றியது பஞ்சாப்
18-May-2025
குளித்தலை :குளித்தலை அடுத்த, நல்லுார் பஞ்., அலுவலகம் முன், முதல்வர் மறு சீரமைப்பு வீடு வழங்கும் திட்டம் குறித்து, சிறப்பு கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.யூனியன் கமிஷனர் விஜயகுமார் தலைமை வகித்தார். பஞ்., செயலாளர் மதியழகன் தீர்மானங்களை வாசித்தார். இக்கூட்டத்தில், தொகுப்பு வீடு பராமரிப்பு பணி செய்வதற்கு பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. முன்னாள் பஞ்.. தலைவர் கலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மொத்தம், 23 -மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.இதேபோல் பொய்யாமணி, குமாரமங்கலம், வதியம், மணத்தட்டை, கே.பேட்டை, ராஜேந்திரம், இரணியமங்கலம், வைகைநல்லுார், சத்தியமங்கலம், திம்மம்பட்டி உள்ளிட்ட, 13 பஞ்.,களிலும், தோகைமலை யூனியனில் உள்ள, 20 பஞ்.,களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.பஞ்.. செயலாளர்கள் பன்னீர், லெனின், பழனி, கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
05-Jun-2025
10-May-2025
18-May-2025