உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாநகராட்சி பகுதிகளில் 240 கொடி கம்பங்கள் அகற்றம்

கரூர் மாநகராட்சி பகுதிகளில் 240 கொடி கம்பங்கள் அகற்றம்

கரூர், தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர், ஜாதி சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் உள்ளிட்டோர், அதிகளவில் கொடி கம்பங்கள் வைத்திருந்தனர். இவை போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலைகளை மறித்தும் அமைக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கடந்த ஜனவரி மாதம், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கொடி கம்பங்களை, தாங்களாகவே முன்வந்து சம்பந்தப்பட்டோர் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.அதன்படி கடந்த, 24 முதல் கரூர் மாநகராட்சி பகுதியில் பல்வேறு கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணி நடந்து வந்தது. அரசியல் கட்சியினர், தொழிற்சங்கம், ஜாதி அமைப்பு உள்பட 240க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டது. கரூர் பஸ் ஸ்டாண்ட், சர்ச் கார்னர், லைட்ஹவுஸ், திண்ணப்பா கார்னர், தான்தோன்றிமலை, ராயனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. சில இடங்களில் கொடி கம்பங்களை, அந்தந்த கட்சியை சேர்ந்தவர்களே அகற்றி வருகின்றனர். அகற்றப்படாத கொடி கம்பங்களை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மின் கம்பிகளுக்கு அருகே உள்ள கம்பங்கள், மின்வாரியம் உதவியோடு அகற்றப்பட்டது. கரூர் மாநகராட்சி இடங்களில் உள்ள, அனைத்து கொடி கம்பங்களும் அகற்றப்பட்டுள்ளன. சில இடங்களில் சிமென்ட் பீடங்கள், பொக்லைன் இயந்திரம் வாயிலாக விரைவில் இடிக்கப்படவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ