உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 33 வது பொதுக்குழு கூட்டம்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 33 வது பொதுக்குழு கூட்டம்

கரூர், கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், 33 வது பொதுக்குழு கூட்டம் தலைவர் ராஜூ தலைமையில் தனியார் ஓட்டலில் நடந்தது.அதில், கரூர் திருமாநிலையூர் பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைத்த முதல்வர் ஸ்டாலின், கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள காலாவாதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். அத்தியவசிய உணவு பொருட்கள் மீதான, 5 சதவீத ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும். பண்டிகை காலங்களில் தரைக்கடை அமைக்க அனுமதி தரக்கூடாது.கரூர் நகரில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மத்திய அரசு இறக்குமதி பருத்திக்கான, 11 சதவீத வரியை குறுகிய காலத்துக்கு நீக்கி உள்ளதை வரவேற்பது, காவல் துறையினர் வாகனங்களை ஆய்வு செய்யும் போது, ஆவணங்களை சரி பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில தலைவர் விக்ரம ராஜா, துணைத்தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ப, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை