கொத்தடிமைகள் 40 பேர் மீட்பு
ப.வேலுார், ப.வேலுார் அடுத்த ஆரியூர்பட்டியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த, குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என, 40 பேர் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக, நாமக்கல் கலெக்டர் உமாவிற்கு புகார் சென்றது.அவரது உத்தரவுப்படி, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தலைமையில், போலீசார், சைல்டு லைன் அமைப்பினர் அடங்கிய குழுவினர், நேற்று சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணையில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, பீஹார் மாநிலத்தை சேர்ந்த, 40 பேர் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களை மீட்டு, நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைத்தனர். குழுமத்தின் உத்தரவுப்படி, இளநகர் சிறார் இல்லத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோழிப்பண்ணையில் இருந்து கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்கள் விருப்பப்படி, சொந்த ஊரான பீஹாருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.