உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவிலில் முற்றுகை போராட்டம் 500 பேர் மீது வழக்குப்பதிவு

கோவிலில் முற்றுகை போராட்டம் 500 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர், நவ. 9-கரூர் அருகே, நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் பெயரில், பட்டா உள்ள காலி இடங்கள், வீட்டுமனைகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த, 6 மாலை நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து, வெண்ணை மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ரமணி காந்தன் மற்றும் கோவில் அர்ச்சகர்களை, பணி செய்ய விடாமல் தடுத்ததாக, கோவில் செயல் அலுவலர் சுகுணா, போலீசில் புகார் அளித்தார்.புகாரின்படி, கரூர் மேற்கு மாவட்ட நா.த.க., செயலாளர் நன்மாறன், முன்னாள் வி.ஏ.ஓ., காமராஜ், பாலு, ஆனந்தன், ரஞ்சித் உள்பட, 500 பேர் மீது, வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ