விழும் நிலையில் பட்டுப்போன மரம் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்
கரூர், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வேலாயுதம்பாளையத்தில் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரத்தை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வேலாயுதம்பாளையத்தில் சாலையோரம் மரங்கள் உள்ளன. அதில், பட்டுப்போன நிலையில் மரம் ஒன்று காணப்படுகிறது. காய்ந்த நிலையில் மரத்தின் ஒவ்வொரு கிளையாக விழுந்து வருகிறது. இந்த வழியாக பாதசாரிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பலர் சென்று வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவியர் சைக்கிளில் சென்று வருகின்றனர். எனவே, மரம் கீழே விழும் நிலையில் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, பட்டுப்போன மரத்தை, உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.