ஆடு மேய்த்த மூதாட்டியை தாக்கி 1 பவுன் தாலியை பறித்த மர்ம நபர்
.குளித்தலை: ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி, ஒரு பவுன் தாலியை பறித்துச்சென்ற மர்ம நபர் குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேலதாளியாம்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ் மனைவி லட்சுமி, 60; இவர், நேற்று முன்-தினம் மதியம், 1:00 மணிக்கு, சீகம்பட்டி-தாளியாம்பட்டி சாலையில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அவர் தனியாக ஆடு மேய்த்துக்கொண்டிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர், மங்கி குல்லா அணிந்து வந்து மூதாட்டி லட்சுமியை தாக்கி, கைகளை கயிற்றால் கட்டியுள்ளார். தொடர்ந்து, அவரது கழுத்தில் இருந்த, ஒரு பவுன் தாலியை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி சத்தமிட்டுள்ளார். உடனே மர்ம நபர் துணியை எடுத்து மூதாட்டியின் வாயில் பொத்தி, தாலியை பறித்-துக்கொண்டு தப்பி ஓடினார். கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து அடைத்ததால் அவரால் எதுவும் செய்ய முடியாமல் அங்கேயே கிடந்துள்ளார்.பின், மாலை, 4:00 மணிக்கு, மேலதாளியாம்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவர், வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்துள்ளார். அப்போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் லட்சுமி இருப்-பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கை, கால்களில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து மூதாட்டியை மீட்டார். அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், மர்ம நபர் குறித்து விசா-ரணை மேற்கொண்டு வருகின்றனர்.