தரமற்ற முறையில் கட்டப்பட்ட நிழற்கூடம்
அரவக்குறிச்சி:கரூர் எம்.பி., தொகுதியின் மேம்பாட்டு நிதியில், சின்னதாராபுரம் பகுதியில், நான்கு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம், தரமற்ற முறையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கட்டப்பட்டு சில நாட்களேயான நிலையில், நிழற்கூடத்தின் கைப்பிடி, படிகள் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பாதுகாப்பற்ற சூழலில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதாகவும் கூறப்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட நிழற்கூடம், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அதில், 'தரமற்ற முறையில் கட்டப்பட்ட நிழற்கூடத்தை உடனடியாக சீரமைத்து, உறுதியான கட்டுமானத்துடன், மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.