உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வங்கி பெண் ஊழியரிடம் தங்க செயினை பறிக்க முயன்ற வாலிபர்

வங்கி பெண் ஊழியரிடம் தங்க செயினை பறிக்க முயன்ற வாலிபர்

கரூர், டிச. 24-கரூர் மாவட்டம், காக்காவாடி பகுதியை சேர்ந்த சிவசாமி மனைவி ரேவதி, 40; சுக்காலியூர் ஐ.ஓ.பி., கிளையில் கிளர்க்காக பணி செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, டூவீலரில் காக்காவாடி சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, ரேவதியை மற்றொரு டூவீலரில் பின் தொடர்ந்த, கடவூரை சேர்ந்த மணிவண்ணன், 29, அவரது தங்கசெயினை பறிக்க முயன்றார்.சுதாரித்த ரேவதி, சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள், மணிவண்ணனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ