உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தென்னிலையில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை தேவை

தென்னிலையில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை தேவை

கரூர்: க.பரமத்தி அருகே, தென்னிலை பஞ்.,ல், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில், 50 சதவீத மக்கள் கூலி தொழிலாளியாக உள்ளனர். இவர்களின் வீட்டில் நடக்கும் காதணி விழா, திருமணம், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்த, இந்த பஞ்சாயத்தில் வசதியில்லை. வெளி-யூருக்கு சென்று நடத்தி வருகின்றனர். இங்கிருந்து, 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடுமுடிக்கு செல்ல வேண்டியுள்-ளது. கொடுமுடியில் சுப நிகழ்ச்சிகள் நடத்த மண்டபத்துக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்வதுடன், உற்றார் உறவினர்கள் வரு-வதற்கு மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டியுயள்ளது.இவ்வாறு மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்த முடியாத ஏழை மக்கள், கோவிலில் வைத்து சிக்கனமாக திருமணத்தை முடித்து கொள்கின்றனர். இருந்தாலும் வரவேற்பு வைக்க போது-மான இடவசதியோ, பொது இடங்களோ இருப்பதில்லை. இவ்-வாறு நிகழ்ச்சிகள் நடத்த வெளியூரில் வைக்க நினைத்தாலும் சில நேரங்களில் நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபமோ, சமுதாயக்கூ-டமோ கிடைப்பதில்லை. சிலர் திருமணம் மற்றும் காதணி விழா நடத்துவதற்கு முன்பு மண்டபம் உள்ளதா என தேடி அலைந்த பிறகே நிகழ்ச்சிகளை முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். மக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக்-கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏழை, நடுத்தர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை