உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை; கலெக்டர்

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை; கலெக்டர்

கரூர், கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் கோடை பருவ சாகுபடி இருப்பில் உள்ள நீரை பயன்படுத்தி நடக்கிறது. நெல், சோளம், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, எள் மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மாவட்டத்தில் யூரியா-, 1165 மெ.டன், டி.ஏ.பி., -504 மெ.டன், பொட்டாஷ், -715 மெ.டன், காம்ப்ளக்ஸ்-, 1324 மெ.டன், சூப்பர் பாஸ்பேட், - 130 மெ.டன் என மொத்தம், 3,838 மெ.டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும், உர விற்பனை உரிமத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரம் கொள்முதல் செய்திட வேண்டும். விற்பனையாளர்கள் பிற மாவட்டங்களுக்கு உரங்களை விற்பனை செய்ய கூடாது. மானிய விலையில் உள்ள உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டை பெற்று விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை விவசாயிகள் அறியும் வண்ணம் நாள்தோறும் பராமரிக்க வேண்டும். அரசின் உத்தரவு படி, மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். மீறி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி