அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
கரூர்: கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட புலியூர், உப்பிடமங்கலம் டவுன் பஞ்., அ.தி.மு.க., சார்பில், செயல் வீரர்கள் கூட்டம், உப்பிடமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.மாநில அ.தி.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி பங்கேற்று, வரும் சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,ஐ மீண்டும் முதல்வராக்கும் வகையில் பணிகளை தொடங்குவது, தி.மு.க., அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை, பொதுமக்களிடம் பிரசாரம் மூலம் எடுத்து கூறுவது குறித்து விளக்கம் அளித்து பேசினார்.கூட்டத்தில், மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் விஜயபாஸ்கர், துணை செயலாளர் ஆலம் தங்க ராஜ், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், டவுன் பஞ்., அ.தி.மு.க., செயலாளர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர். * குளித்தலையில் நகர அ.தி.மு.க., சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. நகர செயலர் மணிகண்டன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, சீனிவாசன் ஆகியோர், கட்சி செயல்பாடுகள் குறித்து பேசினர்.இதேபோல், குளித்தலை மேற்கு ஒன்றியம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜயவினாயகம் வரவேற்றார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், முன்னாள் எம்.எல்.ஏ., சசிகலா ரவி, மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், 20க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.* மருதுார் நகரம் சார்பில் ராஜேந்திரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு நகர செயலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். காவல்காரன்பட்டியில், தோகைமலை கிழக்கு மற்றும் நங்கவரம் நகரம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஒன்றிய செயலர் சந்திரசேகர், திருபதி ஆகியோர் வரவேற்றனர்.