உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

கரூர்,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில துணைத்தலைவர் வசந்தாமணி தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், தரிசு மற்றும் புறம்போக்கு நிலங்களை நிலமற்ற, விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும், அனைவருக்கும் சொந்த வீடு வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளுக்கு பட்டா வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு தனி ஆணையம் அமைக்க வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டு, பட்டியல் சமூக மக்களிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட தலைவர் கந்தசாமி, செயலாளர்கள் சக்திவேல், ராஜூ, மா.கம்யூ., கட்சி மாவட்ட செயலர் ஜோதிபாசு, ஒன்றிய செயலர் முருகேசன், நகர செயலர் தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை