மேலும் செய்திகள்
லட்சுமி நாராயண பெருமாள்கோவிலில் சிறப்பு பூஜை
01-May-2025
கிருஷ்ணராயபுரம் மாயனுார் வேளாண்மைத்துறை சார்பில், உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை நிகழ்ச்சி சமுதாயக்கூட வளாகத்தில் நடந்தது.கிருஷ்ணராயபுரம் வேளாண்மை துறை துணை இயக்குனர் அரவிந்தன் தலைமை வகித்தார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி வாயிலாக திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், மாணிக்கமங்கலம் கிராமத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யும் வகையில், அந்தந்த மாவட்ட வட்டார அளவில் உள்ள வேளாண் துறை சார்பில் உழவரை தேடி வேளாண் திட்டம் நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களான மாயனுார், புனவாசிப்பட்டி ஆகிய ஊர்களில் இந்நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை, சந்தைப்படுத்துதல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.வருவாய்த்துறை தேர்தல் பிரிவு தாசில்தார் வித்தியாவதி, மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் ரவிராஜா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
01-May-2025