அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
கரூர், புகழூர் நகர அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில், புகழூரில் நடந்தது.அதில், வரும் சட்டசபை தேர்தலில் பூத் கமிட்டியின் செயல்பாடுகள், தி.மு.க., அரசில் நிலவி வரும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, தி.மு.க.,வின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், நிறுத்தப்பட்டுள்ள அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்தல் உள்ளிட்ட, ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் பேசினார்.கூட்டத்தில், மாவட்ட துணை செயலர் ஆலம் தங்கராஜ், பாசறை செயலர் சரவணன், ஒன்றிய செயலர் கமல கண்ணன், நகர செயலர் விவேகானந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.