அ.தி.மு.க.,வினர் காலண்டர் வழங்கல்
குளித்தலை: கருர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செய-லாளர் விஜயபாஸ்கர் உத்தரவுப்படி, குளித்தலை நகர செயலாளர் மணிகண்டன் தலைமையில், நகர அ.தி.மு.க., பொறுப்பாளர்கள், சுங்கச்சாவடி, பஸ் ஸ்டாண்ட், பெரியபாலம், மாரியம்மன் கோவில், பஜனை மடம், அண்ணா நகரில் உள்ள பொது மக்கள், டிரைவர்கள், வணிக நிறுவனங்களுக்கு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இ.பி.எஸ்., படம் பொறித்த, 2026ம் ஆண்டு காலண்டர் இலவசமாக வழங்கினர்.இதேபோல், குளித்தலை ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் பஞ்., பகுதிகளில் கட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்-களின் வீடுகளுக்கு சென்று, 2026ம் ஆண்டு காலண்டர் இலவசமாக வழங்கினர்.