மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் ஆர்ப்பாட்டம்
11-Jun-2025
கரூர், கரூர் மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், சங்க நிர்வாகிகள் சிவகங்கை மங்கையர்கரசி, தென்காசி மணிமேகலை ஆகியோரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் ஜீவானந்தம், நிர்வாகிகள் தண்டபாணி, சரவணன், ராஜா முகமது உள்பட பலர் பங்கேற்றனர்.
11-Jun-2025