உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / 24 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம்

24 வழித்தடங்களில் மினி பஸ் இயக்க விண்ணப்பிக்கலாம்

கரூர்: இரண்டாம் கட்டமாக, 24 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க வரும், 15க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை போக்கு வரத்து சேவையை வழங்குவதற்காக, மினி பஸ் இயக்க விரிவான திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டு, 29 புதிய வழித்தடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு இருந்தது. இரண்டாம் கட்டமாக, 24 வழிதடங்களுக்கு வரும், 15க்குள் விண்ணப்பிக்கலாம். புதிய வழித்தடங்கள் தொடர்பான விரிவான விபரங்கள், கரூர் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டால், குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை