உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஓய்வு ஆசிரியர்களுக்கு கரூரில் பாராட்டு விழா

ஓய்வு ஆசிரியர்களுக்கு கரூரில் பாராட்டு விழா

கரூர்: கரூரில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கரூர் வட்டார கிளை சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வட்டார தலைவர் மதன் தலைமை வகித்தார். இங்கு, மாவட்ட தலைவர் பொன்னம்பலம், மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு சால்வை, சந்தன மாலை அணிவித்து, கேடயம், பரிசு பொருள் வழங்கினர். கரூர் வட்டார கல்வி அலுவலர் மணிமாலா வாழ்த்தி பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட பொருளாளர் அமல்ராஜ், வட்டார செயலாளர் ஜெயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !