மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் விழிப்புணர்வு முகாம்
கரூர், கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம், சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.அதில், போதையில்லாத தமிழகம் ஏற்படுத்த வேண்டும், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், போதை பொருட்கள் பயன்பாட்டில் இருந்து மீள்வது குறித்தும், மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஏ.டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் விளக்கம் அளித்து பேசினார். விழிப்புணர்வு முகாமில் கோட்ட கலால் அலுவலர்கள் சக்திவேல், செந்தில் குமார், பள்ளி தலைமையாசிரியர் சார்லஸ் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.