உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பா.ஜ., நிர்வாகியின் கணவர் விபசார வழக்கில் சிக்கினார்

பா.ஜ., நிர்வாகியின் கணவர் விபசார வழக்கில் சிக்கினார்

தான்தோன்றிமலை: கரூர் அருகே விபசார வழக்கில், பா.ஜ., நிர்வாகியின் கணவரை போலீசார் கைது செய்தனர். கரூர், தான்தோன்றிமலை ஊரணிமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., நந்தகோபால் உட்பட போலீசார், குறிப்பிட்ட வீட்டுக்கு அருகே நின்று கண்காணித்தனர். அப்போது, வீட்டுக்குள் ஒரு பெண்ணுடன் செல்ல முயன்ற, கரூர் மாவட்டம், மாயனுாரைச் சேர்ந்த ரகுபதி, 48, வீட்டில் இருந்த மற்றொரு பெண் உட்பட மூவரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் விபசாரத்தில் ஈடுபட்டது தெரிந்தது. மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில், ரகுபதியின் மனைவி கற்பகவள்ளி, கரூர் மாவட்ட பா.ஜ., செயலர். கரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் கூறுகையில், ''மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை கண்டுகொள்ளாத போலீசார், பா.ஜ., நிர்வாகி கணவரை, பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக, மாநில தலைவர் அனுமதி பெற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதன் பின்னணியில், முக்கிய புள்ளி ஒருவர் உள்ளதாக சந்தேகம் உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி