பா.ஜ., இளைஞரணி ரத்த தானம்
கரூர்: கரூர் மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைமயில், இளைஞரணி செயலாளர் தீனசேனன் தலைமையில், நேற்று ரத்ததான முகாம் நடந்தது. அதில், மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்நாதன் உள்பட, 50க்கும் மேற்-பட்ட, பா.ஜ.,வினர் ரத்த தானம் வழங்கினர்.மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர்கள் கோபிநாத், சக்திவேல் முருகன், கரூர் நகர தலைவர் கார்த்தி-கேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.