உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அங்கன்வாடி பணியாளருக்கு பளார்: கொத்தனார் கைது

அங்கன்வாடி பணியாளருக்கு பளார்: கொத்தனார் கைது

குளித்தலை:குளித்தலை அடுத்த செம்பியநத்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி சூர்யா, 38; அங்கன்வாடி பணியாளர். இவர், மேட்டூர் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் பிரதீப்குமார், 29, என்பவரிடம், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், 25,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். கொடுத்த பணத்தை, பிரதீப் பலமுறை கேட்டும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, 10:45 மணிக்கு, சூர்யா, அங்கன்வாடி மையத்தில் இருந்தபோது, அங்குசென்ற கொத்தனார் பிரதீப்குமார், தகாத வார்த்தையில் பேசிய, கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அங்கன்வாடி பணியாளர் சூர்யா, மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகார்படி, பாலவிடுதி போலீசார், கொத்தனார் பிரதீப் குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !