அண்ணன் மாயம்; தம்பி புகார்
குளித்தலை, குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., கிழக்கு தாளியம்பட்டியை சேர்ந்தவர் ஜீவாநந்தம், 25. இவரது அண்ணன் பிரசாந்த், 31. பி.காம் பட்டதாரி. இவரது தங்கை திருப்பூரில் வசித்து வருகிறார். கடந்த 10ம் தேதி மதியம் 2:30 மணியளவில், திருப்பூரில் இரண்டு நாள் தங்கி வேலை செய்து வருவதாக கூறி சென்றவர், தங்கை வீட்டிற்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது அண்ணனை காணவில்லை என, தம்பி ஜீவாநந்தம் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.