மேலும் செய்திகள்
கையுந்து போட்டி: சேதுபதி பள்ளி வெற்றி
17-Oct-2024
கரூர்:புகளூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. கரூர் வருவாய் மாவட்ட அளவிலான, மாணவர்களுக்கான கால்பந்து போட்டி, எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் நடந்தது. -19 வயது பிரிவில் முதல் போட்டியில் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி அணியையும், இரண்டாம் போட்டியில் மவுண்ட் கிரிஸ் அய்யர்மலை அணியையும் வென்றது. இறுதி போட்டியில், பி.ஏ., வித்யாபவன் மேல்நிலைப் பள்ளியை, 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, முதல் இடத்தை பெற்று, புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.மாணவர்களை, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்க மாவட்ட தலைவர் மகாமுனி மற்றும் குணா, கதிர், மணிகண்டன், உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.
17-Oct-2024