உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சினிமா தியேட்டரில் மயங்கி விழுந்து வியாபாரி பலி

சினிமா தியேட்டரில் மயங்கி விழுந்து வியாபாரி பலி

கரூர், கரூரில், சினிமா தியேட்டரில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்தார்.கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 52, வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மதியம், கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள, சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார். படம் முடிந்த பிறகும், எழுந்து செல்லவில்லை.அவர் சீட்டில் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை, தியேட்டர் ஊழியர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, ரமேஷின் மனைவி தனலட்சுமி, 50, போலீசில் புகார் செய்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ