உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி: தாய், மகன் மீது வழக்கு

திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி: தாய், மகன் மீது வழக்கு

கரூர்: கரூர் அருகே, திருமணம் செய்து கொள்வதாக கூறி, இளம் பெண்ணை ஏமாற்றி பண மோசடி செய்ததாக, தாய், மகன் உள்-பட மூன்று பேர் மீது, குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த ஹபீத் முகமது என்பவரது மகள் ெஷரீன் பர்க்கானா, 35; இவர், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.இந்நிலையில், திருமண இணையதளம் மூலம் மறுமணம் செய்து கொள்வதாக கூறி, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த சையத் முகமது அபுபக்கர், 40, என்பவர், சவுதி அரேபி-யாவில் இருந்தபடி, ெஷரீன் பர்க்கானாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.பிறகு, கடந்த பிப்ரவரியில் சவுதி அரேபியாவில் இருந்தபடியே, தொழில் தொடங்க சையத் முகமது அபுபக்கர், பல்வேறு தவ-ணைகளில் ெஷரீன் பர்க்கானாவிடம் இருந்து, 33 லட்சத்து, 3,000 ரூபாயை பெற்றுள்ளார். பிறகு, அவரை திருமணம் செய்து கொள்ள, சையத் முகமது அபுபக்கர் மறுத்துள்ளார்.இதனால், அதிர்ச்சியடைந்த ெஷரீன் பர்க்கானா, கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, சையத் முகமது அபுபக்கர், அவரது தாய் அப்ரா, சகோதரி நசீபா ஆகிய, மூன்று பேர் மீது குற்றப்பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை