உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய இருவர் மீது வழக்கு

குளித்தலை, குளித்தலை அடுத்த கீழ குறைப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வினித், 23. இவர் கடந்த, 2ம் தேதி, கீழ வதியத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில், சுவாமி குட்டி குடித்தல் விழாவிற்கு சென்று விட்டு, பைக்கில் திரும்பி வந்தார். அப்போது நடுவதியம் அருகே, பைக்கை வழிமறித்து நிறுத்தி, எதற்காக இவ்வளவு வேகமாக பைக்கில் செல்கிறாய் என கேட்டு, தகாத வார்த்தையால் பேசி, தரணி மற்றும் பெயர் விலாசம் தெரியாத ஒருவர் சேர்ந்து, கல்லால் அடித்து ரத்தக்காயம் ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட வினித், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வினித் கொடுத்த புகார்படி, தரணி உட்பட இருவர் மீது, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை