செங்குந்தபுரம் முத்துநகரில் சிமென்ட சாலை சேதம்
கரூர், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, செங்குந்தபுரம் முத்துநகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்-ளன. இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்ப-குதியில் உள்ள சிமென்ட் சாலை, சேதமடைந்துள்ளது. இங்கு, குடிநீர் குழாய் சரி செய்யும் போதும், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் போதும், சிமென்ட் சாலை சேதப்படுத்தப்-பட்டுள்ளது. குண்டும், குழியுமாக பல மாதங்களாக சரிசெய்யப்ப-டாமல் உள்ள இந்த சாலைகளில், வாகனங்களில் செல்வது சிரம-மாக உள்ளதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர். மழை காலத்தில் தண்ணீர் தேங்கி சுகா-தார கேடு ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில், தினமும் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.