பழைய வாங்கலம்மன் கோவிலில் தேரோட்ட விழா கோலாகலம்
கரூர், : கரூர், பழைய வாங்கலம்மன் கோவிலில் தேரோட்ட விழா கோலாகலமாக நடந்தது. கரூர் மாவட்டம், வாங்கலில் உள்ள பழைய வாங்கலம்மன் கோவிலில், வைகாசி திருவிழா கடந்த, 21ல் தொடங்கியது. நாள்தோறும் இரவு, பல்வேறு சிறப்பு வாகனங்களில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று கோவிலில் தேரோட்டம் நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். தீபாராதனை காட்டப்பட்ட பின், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், அங்கு சுற்றியுள்ள எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்றது.