உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சமையல் காஸ் சிலிண்டர்கள் பயன்பாடு குடிமைப்பொருள் போலீசார் எச்சரிக்கை

சமையல் காஸ் சிலிண்டர்கள் பயன்பாடு குடிமைப்பொருள் போலீசார் எச்சரிக்கை

ஈரோடு, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர்களை வணிக பயன்பாட்டிற்கும், வாகனங்களுக்கும் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஈரோடு குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பெருந்துறை நிச்சாம்பாளையத்தில், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை, சட்ட விரோதமாக வணிக பயன்பாடு சிலிண்டர்களுக்கு மாற்றி, விற்பனை செய்து வருவதாக கடந்த, 7ல் போலீசாருக்கு தகவல் வந்தது. மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, சோதனை நடத்தினர். வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை, வணிக பயன்பாடு சிலிண்டரில் நிரப்பி விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பெருந்துறை நிச்சாம்பாளையம் வடக்கு தோட்டம் முருகன், 32, ஓடைமேட்டை சேர்ந்த ராமச்சந்திரமூர்த்தி, 31, ஆகிய இருவரையும் போலீசார் இரு பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 45 சிலிண்டர்கள், சட்ட விரோதமாக பயன்படுத்திய கம்பரசர் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜாகுமார் கூறுகையில்,'' வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்களை, வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதும், எவ்வித அனுமதியின்றியும் காஸ் சிலிண்டர்களில் இருந்து வாகனங்களுக்கும், வணிக பயன்பாடு சிலிண்டர்களுக்கும் மாற்றுவது தண்டனைக்குரியது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, 7 ஆண்டு வரை சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். எனவே, வீட்டு உபயோக சிலிண்டர்களை, வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ