மேலும் செய்திகள்
பஞ்சப்பட்டியில் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
04-May-2026
கிருஷ்ணராயபுரம்:பஞ்சப்பட்டி சுகாதார வளாகத்தில், துாய்மை பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் செல்லும் பகுதியில், சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதன் வளாகத்தை சுற்றி முள் செடிகள் வளர்ந்தன. இதனால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. திறந்த வெளி கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்த துவங்கினர்.மேலும் பஸ் ஸ்டாப் நிழற்கூடம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இந்நிலையில் பஞ்சாயத்து சார்பில், துாய்மை பணியாளர்களை கொண்டு சுகாதார வளாகத்தை சுற்றி வளர்ந்த செடிகள், முள் புதர்களை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து சுகாதார வளாகத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
04-May-2026