மேலும் செய்திகள்
கிடங்கு மேலாண்மை பயிற்சி அறிவிப்பு
27-Oct-2024
பட்டய கணக்காளர் தேர்வுமாணவர்களுக்கு பயிற்சிகரூர், நவ. 5-ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, பட்டய கணக்காளர்- உள்பட பல்வேறு தேர்வு பயிற்சி வழங்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: தாட்கோவின் முன்னெடுப்பாக, சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பட்டய கணக்காளர்- இடைநிலை, நிறுவன செயலாளர்- இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்- இடைநிலை ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, குடும்ப ஆண்டு வருமானம், மூன்று லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். ஓராண்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ளவர்கள் பயிற்சியில் சேருவதற்கு, தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.comபதிவு செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
27-Oct-2024