உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லுாரி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கல்லுாரி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லுாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழகம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை யில், கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரி முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், யு.ஜி.சி., வரைவு அறிக்கை, 2025ஐ திரும்ப பெற வேண்டும், ஜனவரி, ஜூலையில் மட்டும் பணி மேம்பாடு என கூறி பணப் பலன்களை பறிக்கக் கூடாது, நுழைவு தேர்வு என்ற பெயரில், உயர்க்கல்வி வாய்ப்பை பறிக்க கூடாது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லுாரி முதல்வர் சுதா உள்பட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை