உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு போட்டி தேர்வு பயிற்றுனர் தேவை

வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு போட்டி தேர்வு பயிற்றுனர் தேவை

கரூர் : கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், போட்டி தேர்வு பயிற்சிக்கு பயிற்றுனர் தேவை என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. 2025--26ம் ஆண்டிற்கான புதிய பயிற்றுனர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பயிற்றுனர்கள் எந்த பாடப்பிரிவினை எடுக்க இருக்கிறார்களோ, அந்த பாடப்பிரிை முடித்து குறைந்தபட்சம், 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பயிற்றுனர்களுக்கு மதிப்பூதியமாக, 1 மணி நேரத்திற்கு, 800 ரூபாய்- என கணக்கிடப்பட்டு வழங்கப்படும். மாவட்டத்தை சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை, கையாளும் அனுபவமும் திறமையும் மிக்க பயிற்றுனர்கள் வரும் 30ம் தேதிக்குள் நேரில் அணுக வேண்டும்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !