மேலும் செய்திகள்
இன்று இனிதாக (29.05.2026) திருப்பூர்
29-May-2026
கரூர்:வேலை வாய்ப்பு துறை இணையதளத்தில், போட்டி தேர்வு மென்பாட குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கருர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இணைய தளத்தில், போட்டித்தேர்வு மென்பாட குறிப்பு, பாடத்திட்டங்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள், ஒலிப்பாடக்குறிப்பு, மின்னுால், மாதிரி தேர்வு, மாதிரி தேர்வு நேர்காணல், குழுவிவாதம் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.மேலும், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டிதேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை, 7:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7:00 முதல் 9:00 மணி வரையிலும் ஒளிபரப்பப்படுகிறது. இதில், பதிவு செய்து பயன்பெறும்மாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 6374319939, 6383050010 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
29-May-2026