உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குளித்தலையில் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

குளித்தலையில் ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

குளித்தலை, குளித்தலை அடுத்த, பணிக்கம்பட்டியில் செயல்பட்டு வரும், திருவிக அரசு நிதி உதவி பெறும் பள்ளியில், 39 ஆண்டுகள் ஆசிரியராக இருந்த பிரகாசம் என்பவர், கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். இவருக்கு பாராட்டு விழா, குளித்தலையில் நடைபெற்றது.ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகிகள் செழியன், அம்பிகா, மூத்த வக்கீல் பாலன், நாட்டாமை சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியில் பிரகாசத்தின் தாய், தந்தையர் ஆசிரியராகவும், தொடர்ந்து பிரகாசம், 39 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.பணி நிறைவு பெற்ற ஆசிரியர் மற்றும் அவரது துணைவியார், அதே பள்ளியில் ஆசிரியரான தங்கமணி ஆகியோரை, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவ மாணவியர் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை